யாழில் சட்டவிரோத கொல்களம் முற்றுகை; மீட்கப்பட்ட வாயில்லா ஜீவன்கள்!
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் முற்றுகையிடப்பட்டு, நான்கு மாடுகள் உயிரிடன் மீட்கப்பட்டுள்ளதுடன்,58 மாட்டிறைச்சியும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது சட்டவிரோத கொல்களத்தினை நடாத்தி வந்த 43 வயதான நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் சட்டவிரோத கொல்களம்
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் சட்டவிரோத கொல்களம் இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த இடத்தினை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
அதன்போது , மூன்று பசுமாடுகள் உள்ளிட்ட நான்கு மாடுகள் இறைச்சியாக்க தயாராக கட்டப்பட்டிருந்த நிலையிலும் , ஏற்கனவே இறைச்சியாக்கப்பட்ட மாட்டின் 58 கிலோ இறைச்சியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதான நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், மீட்கப்பட்ட மற்றும் இறைச்சியாக்கப்பட்ட மாடுகள் திருடப்பட்ட மாடுகளாக என்பது தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.