யாழ் பல்கலையில் பட்டம் பெற்ற விழிப்புலனற்ற மாணவர்கள்; பலரும் பாராட்டு
தமது இரு பார்வைகளையும் இழந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினை நிறைவு செய்து, பொதுக்கலைமாணிப் பட்டம் பெற்றமைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை முதல் இடம்பெற்றது.

இந்நிலையில் சனிக்கிழமை (21) நடைபெற்ற மூன்றாம் நாள் அமர்வில் இரு பார்வைகளையும் இழந்த வாழ்வக மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக்கலைமாணிப்பட்டத்தினைப் பெற்றுக்கொண்டனர்.
இவர்களுள் துரைராசா அருண்குமார் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 3A, 3B, 2C, S பெறுபேறுகளைப் பெற்றதோடு, க.பொ.த. உயர் தரத்தில் 3A சித்திபெற்றுப் பல்கலைக்கழகம் சென்றவர் .
வாழ்வக வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதாரண மாணவர்களுக்கு இணையான புள்ளிகள் பெற்று சித்திபெற்ற ஒரேயொரு மாணவன் என்ற பெருமையும் இற்றைவரை இவருக்கே உரியதாகின்றது.
இந்நிலையில் இருபார்வையினையும் இழந்த இரண்டு மாணவர்களும் நீண்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்