ஒல்லியான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு வேண்டுமா? அப்போ இந்த ஜூஸ் குடிங்க
ஒல்லியான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு என்பது பலரது விருப்பமாக உள்ளது. எடை இழப்பு என்று வரும்போது இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
இந்த பகுதிகளில் சேர்ந்துள்ள அதிக கொழுப்பை கரைக்க நமது தினசரி உணவில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும். தினசரி உட்கொள்ளும் உணவு இதில் அதிக பங்கு வகிக்கின்றது.
எடை இழப்பு பயணத்தை காய்கறி சாறுகளுடன் துவக்குவது ஒரு நல்ல வழியாக இருக்கும். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பிய இந்த சாறுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பிடிவாதமான தொப்பை கொழுப்பையும் வெளியேற்ற உதவுகின்றன.
இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் சேர்ந்திருக்கும் கொழுப்பை நீக்க முயற்சி செய்பவர்கள் இந்த காய்கறி ஜூஸ்களை உட்கொள்ளலாம். இந்த அருமையான சாறுகளின் நன்மைகளையும் அவற்றை செய்யும் வழிமுறைகளையும் இங்கே காணலாம்.
பீட்ரூட் மற்றும் கேரட் சாறு
பீட்ரூட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளன.
இது கல்லீரலில் உள்ள நச்சை நீக்கி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
கேரட்டில் கலோரிகள் குறைவாகவும், வைட்டமின்கள் ஏ மற்றும் கே அதிகமாகவும் இருக்கிறது.
இது இயற்கையான இனிப்பை வழங்குகிறது.
வெள்ளரி மற்றும் கீரை சாறு
வெள்ளரிகளில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் அவை நச்சுகளை வெளியேற்ற உதவும் இயற்கையான டையூரிடிக் ஆகும்.
கீரையில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன.
இது செரிமானத்திற்கு உதவுகிறது, உடலுக்கு முழுமையான உணர்வை அளிக்கின்றது.
முட்டைகோஸ் மற்றும் அன்னாசி பழச்சாறு
முட்டைகோஸ் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்தின் மையமாகும்.
இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்டிடெண்டுகள் நிறைந்துள்ளன.
அன்னாசி இதில் ஒரு வெப்பத்தன்மையை சேர்க்கின்றது.
இது செரிமானத்திற்கு உதவும் ஒரு நொதியான ப்ரோமைலைனைக் கொண்டுள்ளது.
சுரைக்காய் மற்றும் கற்பூரவல்லி சாறு
இது எடையை குறைக்க ஆசைப்படும் அனைவருக்கும் எளிமையானது.
ஆனால் சக்திவாய்ந்த டிடாக்ஸ் ஜூஸ் ஆகும்.
சுரைக்காய் மற்றும் கற்பூரவல்லி இரண்டும் இயற்கையில் காரத்தன்மை கொண்டவை என்பதால் காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொண்டால் இது ஒரு அபாரமான நச்சு நீக்கியாகச் செயல்படும்.
கீரை மற்றும் கற்பூரவல்லி சாறு
கீரை நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பிய குறைந்த கலோரி இலையாகும்.
கற்பூரவல்லி பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சுவையூட்டியாகும்.
இந்த காய்கறி சாறுகள் ஒரு சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் இணைக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அவை தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவினாலும் நீடித்த முடிவுகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது அவசியம்.