உங்கவீட்டு சமையல் அறையில் 7 பொருட்கள் இருந்தால்....... ! ஆயுர்வேதம் கூறும் ரகசியம்
ஆயுர்வேதம் என்பது தொன்றுதொட்டு நம் வாழ்க்கையோடு ஒன்றினைந்த மருத்துவம் ஆகும். நம் அன்றாட உணவுகளின் மூலம் எளிமையாக பின்பற்றக்கூடிய இலகுவான மருத்துவம் தான் ஆயுர்வேதம்.
நம் சமையலறையில் இருக்கும் கீழ்வரும் 7 பொருட்கள் நமக்கு பிணியை நெருங்க விடாது என ஆயுர்வேதம் கூறுகிறது.
அவையாவன,
இஞ்சி:
இது ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் எப்போதும் இருக்கும். ஆயுர்வேத சிகிச்சையின் முக்கிய மூலிகை இது எனலாம். இது நச்சுக்களை நீக்குவதுடன், வயிற்றில் செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரித்து, செரிமானத்திற்கு உதவுகிறது.

உணவில் இஞ்சி சேர்ப்பதைத் தவிர, அன்றாட வாழ்வில் இஞ்சியை சேர்த்துகொள்ள விரும்பினால், உணவுக்கு முன் ஒரு துண்டு பச்சை இஞ்சியை எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் ஊறவைத்து சாப்பிடலாம். மேலும் இஞ்சியை தேநீரில் கொதிக்க வைத்து குடித்தால் சளி அல்லது சைனஸ் தொற்றுக்கு ஒரு இயற்கை தீர்வாகும்.

இலவங்கப்பட்டை:
இலவங்கப்பட்டை ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஜலதோஷத்தை ஏற்படுத்தும் வைரஸை எதிர்த்துப் போராட உதவுகிறது. தொண்டை புண்ணிலிருந்து நிவாரணம் தரும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.

சீரகம்:
சீரகம் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக ஒரு செரிமானத்தை தூண்ட உதவுகிறது. இது வாயுவை வெளியேற்றும் மலமிளக்கியாகவும் செயல்படும்.

தனியா :
வயிற்றில் அதிக உஷ்ணத்தால் அல்லது அமில வீச்சால் அவதிப்படுபவர்களுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது தனியா. இது வீக்கம், வாய்வு , பசியை அதிகரிக்க மற்றும் வயிற்றுப் புழுக்களை அழிக்கவும் உதவுகிறது.

பெருங்காயம் :
பெருங்காயம் செரிமானத்திற்கு பெயர் போன மசாலாவாகும். இது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது மற்றும் வீக்கம், வாய்வு, வயிற்று வலி, பிடிப்புகள் மற்றும் தொடர்ச்சியான ஏப்பம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.

மஞ்சள் :
மஞ்சள் இந்திய உணவுகளில் மிக முக்கியமான அங்கமாகும். ஆயுர்வேத வைத்தியங்களில் அதிகமாக பயன்படுத்தக் கூடிய மசாலா பொடி. இது பித்த தோஷத்திற்கு நல்லது. சூட்டை கிளப்பும் என்பதால் ஆயுர்வேதப்படி உடலில் அக்னியை குறிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் கல்லீரலை நச்சுத்தன்மை இல்லாமல் சீராக்குகிறது. இது மூட்டு வலிகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. அதோடு மூட்டு இயக்கத்தை தளர்த்தவும் உதவுகிறது.

ஏலக்காய்:
உணவில் சுண்டி இழுக்கும் வாசனையை தருவதில் ஏலக்காய்க்கு எப்போதும் முதலிடம்தான். இது ஆயுர்வேதத்தின்படி செரிமானத்தை மேம்படுத்துகிறது. எனவே தினசரி சமையலில் சேர்க்க முடியாவிட்டாலும் அன்றாடம் பருகும் தேநீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.