நெய்யை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்
மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக பொதுவாக எடை வேகமாக அதிகரிக்கும்.
இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது.
இதனால் அதிக கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதை கட்டுப்படுத்த கட்டாயமாக உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும், இல்லையெனில் பிரச்சனை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொழுப்பைக் குறைப்பது
தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பைக் குறைப்பது மிகவும் கடினமான வேலை இதற்கு கடுமையான உடற்பயிற்சிகளும் கடுமையான உணவுக் கட்டுப்பாடும் தேவை.
உடல் எடையை குறைக்க குறைக்க நெய்யை பயன்படுத்தலாம். நெய் என்ற பெயரை கேட்டாலே இது எடையை அதிகரிக்கும் என்றுதான் தோன்றும்.
இதை வைத்து எப்படி எடையை கட்டுப்படுத்துவது என்ற கேள்வி எழக்கூடும். தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது.
இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் .உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
தொப்பையை குறைக்க நெய்யை எப்படி பயன்படுத்துவது
வெதுவெதுப்பான நீருடன் நெய்யை உட்கொள்ளவும் தொப்பையை குறைக்க நெய்யை பல வழிகளில் பயன்படுத்தலாம்.
ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டுவிட்டு வெதுவெதுப்பான நீரைக் குடித்தால் போதும்.
இது குடல்களின் இயக்கத்தை விரைவுபடுத்தி, வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை அதிகரிக்கும்.
இது செரிமான அமைப்பை விரைவுபடுத்துவதோடு வயிற்றை எளிதில் சுத்தப்படுத்தி எடையைக் குறைக்க உதவும்.
பயத்தம் பருப்பு நீரில் நெய் கலந்து குடிக்கவும்
பயத்தம் பருப்பு நீர் விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது. பயத்தம் பருப்பு நீரில் நெய்யை கலந்து பின்னர் அதை குடிக்கவும்.
இந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பயத்தம் பருப்பு நீர் வயிற்றை சுத்தம் செய்து மலம் மற்றும் சிறுநீருடன் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளையும் வெளியேற்றுகிறது.
இது தவிர இது குடல் இயக்கத்தையும் எளிதாக்குகிறது. இது வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.