எரிபொருள் வரிசைகளில் இவற்றை செய்தால் நிச்சயம் கைது செய்யப்படுவீர்கள் ; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் சூழலில், பொது அமைதியைப் பேணுமாறு இலங்கை காவல்துறையினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வரிசைகளில் காத்திருக்கும் போது பதற்றமடைவதோ அல்லது மோதல்களில் ஈடுபடுவதோ தீர்வாகாது. அது தேவையற்ற தாமதங்களையே ஏற்படுத்தும்.

போக்குவரத்திற்கு இடையூறு
எரிபொருள் நிலைய ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும்.
வரிசைகளை மீறிச் செல்ல முயற்சிப்பதோ அல்லது ஏனையவர்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் அல்லது வன்முறையில் ஈடுபடுபவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.