விஜய் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால்...DMK, ADMKவுக்கு காத்திருக்கும் வாய்ப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் ஆளுநர் அடுத்த பெரிய கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக இருந்தாலும், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை இன்னும் எட்டவில்லை.

சட்டப்பேரவை
தற்போது காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் தவெகவுக்கு 116 உறுப்பினர்களின் ஆதரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு கிடைத்தால், தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எந்தக் கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்த ஆளுநர் பரிந்துரை செய்யலாம்.
அவ்வாறு ஆளுநர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டால், சட்டப்பேரவை கலைக்கப்பட்டு அடுத்த ஆறு மாதங்களுக்குள் புதிதாகத் தேர்தல் நடத்தப்படும்.