உடலில் ரத்தத்தின் அளவு மிக குறைவாக இருக்கா அப்போ இந்த பழங்களை சாப்பிடுங்க

Pomegranate Water Melon Milk Water
By Yadu Aug 19, 2023 10:16 AM GMT
Report

அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளடக்கிய உணவுகளானது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் இன்றியமையாதது.

குறிப்பாக இரும்புச்சத்தானது உடலின் பல்வேறு செயல்பாடுகள், ஆக்ஸிஜனை கொண்டு செல்வது, ஆற்றலை உற்பத்தி செய்வது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சிறப்பான செயல்பாடு போன்றவற்றில் முக்கிய பங்கை வகிக்கிறது.

முக்கியமாக இரும்புச்சத்து இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை உருவாக்க உதவுகிறது.  

உடலில் ரத்தத்தின் அளவு மிக குறைவாக இருக்கா அப்போ இந்த பழங்களை சாப்பிடுங்க | If The Blood Level Very Low Then Eat These Fruits

இரும்புச்சத்து

உடலில் இரும்புச்சத்து மிகவும் குறைவாக இருந்தால் அதன் விளைவாக உடலில் இரத்தத்தின் அளவு குறைந்து இரத்த சோகையால் பாதிக்கப்படக்கூடும்.

முக்கியமாக இரும்புச்சத்து குறைபாட்டினால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே போதுமான இரும்புச்சத்தை தினமும் உட்கொள்ள வேண்டியது அவசியம்.

உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளதா? உடலில் இரத்தத்தின் அளவை இயற்கை வழியில் அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் இரும்புச்சத்து அதிகம் உள்ள பழங்களை உட்கொள்ளுங்கள்.

அதுவும் இந்த பழங்களை தினமும் உட்கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். 

உடலில் ரத்தத்தின் அளவு மிக குறைவாக இருக்கா அப்போ இந்த பழங்களை சாப்பிடுங்க | If The Blood Level Very Low Then Eat These Fruits

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து மட்டுமின்றி, புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் பிற கனிமச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன.

தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து போதுமான அளவு இருக்கும் மற்றும் இரத்த ஓட்டமும் சிறப்பாக இருக்கும்.

அதுவும் தினமும் 3 பேரிச்சம் பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை மசித்து சேர்த்து குடித்து வந்தால் ஒரே மாதத்தில் இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

உடலில் ரத்தத்தின் அளவு மிக குறைவாக இருக்கா அப்போ இந்த பழங்களை சாப்பிடுங்க | If The Blood Level Very Low Then Eat These Fruits

மாதுளை

கண்ணைக் கவரும் அழகான சிவப்பு நிற மணிகளைக் கொண்ட மாதுளையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளன.

இது தவிர இப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்களும் உள்ளன.

ஆகவே உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்கள் தினமும் ஒரு மாதுளையை உட்கொண்டு வர உடலில் இரத்தம் நன்கு ஊறும். 

உடலில் ரத்தத்தின் அளவு மிக குறைவாக இருக்கா அப்போ இந்த பழங்களை சாப்பிடுங்க | If The Blood Level Very Low Then Eat These Fruits

ஆப்ரிகாட்

உலர்ந்த மற்றும் நற்பதமான ஆப்ரிகாட் பழத்தில் கூட இரும்புச்சத்து அதிகமாக உள்ளன. அதுவும் 100 கிராம்பு ஆப்ரிகாட் பழத்தில் 3.7 மிகி இரும்புச்சத்து உள்ளது.

அதோடு இதில் வைட்டமின் ஏ, பி கரோட்டீன் போன்ற கண்களின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் சத்துக்களும் உள்ளன.

இது தவிர இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உடலில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. 

உடலில் ரத்தத்தின் அளவு மிக குறைவாக இருக்கா அப்போ இந்த பழங்களை சாப்பிடுங்க | If The Blood Level Very Low Then Eat These Fruits

பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்களில் இரும்புச்சத்து அதிகளவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்பழங்கள் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவி புரிகின்றன.

ஏனெனில் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, கிரான்பெர்ரி அல்லது ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளன.

இந்த வைட்டமின் சியானது இரும்புச்சத்தை உறிஞ்ச மிகவும் அவசியமான வைட்டமினாகும்.

எனவே இரும்புச்சத்து உணவுகளை உட்கொள்ளும் போது, அத்துடன் பெர்ரி பழங்களையும் சாப்பிட்டால், இரும்புச்சத்து உடலால் முழுமையாக உறிஞ்சப்படும். 

உடலில் ரத்தத்தின் அளவு மிக குறைவாக இருக்கா அப்போ இந்த பழங்களை சாப்பிடுங்க | If The Blood Level Very Low Then Eat These Fruits

தர்பூசணி

தர்பூசணிப் பழம் நீர்ச்சத்துள்ள பழம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் உண்மையில் அதில் இரும்புச்சத்தும் அதிளவில் உள்ளன.

இந்த பழத்தை உட்கொண்டால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சிறுநீரகங்களும் சுத்தமாகும்.

இதில் உள்ள இரும்புச்சத்து உடலின் ஆற்றலை மேம்படுத்துவதுடன், உடலை நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்கிறது.

முக்கியமாக இப்பழத்தை உட்கொள்ளும் போது அது நுரையீரலில் இருந்து மற்ற அனைத்து உடல் உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் விநியோக செயல்முறையை மென்மையாக்குகிறது.

உடலில் ரத்தத்தின் அளவு மிக குறைவாக இருக்கா அப்போ இந்த பழங்களை சாப்பிடுங்க | If The Blood Level Very Low Then Eat These Fruits

உலர் திராட்சை

உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளன. அதுவும் ஒரு கையளவு உலர் திராட்சையில் 0.8 மிகி இரும்புச்சத்து உள்ளது.

இது உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன.

முக்கியமாக உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் தினமும் உலர் திராட்சையை சிறிது உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தம் நன்கு ஊறும்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US