தேங்காய் சிதறுவது போல சுமந்திரனும் சாணக்கியனும் சிதறினால் நாடு செழிப்பாக இருக்கும் ; கருணாநிதி
தேங்காய் சிதறுவது போல சுமந்திரனும் சாணக்கியனும் சிதறினால் தான் நாடு செழிப்பாக இருக்கும் என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை
இழந்த செல்வாக்கை பெறுவதற்காக தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை ஏற்படுத்தி வெற்றி பெற முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் வளரச்சிக்காக நடத்தப்படும், மக்களின் வாழ்க்கையே பாதிக்கப்படைய செய்யும் இந்த ஹர்த்தாலுக்கு எவரும் ஆதரவளிக்க வேண்டாம்.
இவர்கள் அரசாங்கத்தோடு இணைந்திருந்த போது வட கிழக்கில் இராணுவத்தை வெளியேற சொல்லவில்லை தற்போது அதிகாரம் இல்லாமல் ஆக்கப்பட்ட நிலையில் இராணுவத்தை வெளியேற கூறுகின்றார்.
இது தொடர்பில் பேச இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.