மக்களுக்காக ரௌடித்தனம் எனில் நானும் ரௌடி தான்!

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Local government Election Ramalingam Chandrasekar
By Sulokshi Apr 17, 2025 01:38 PM GMT
Report

  மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழில் இன்று (17) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

மக்களுக்காக ரௌடித்தனம் எனில் நானும் ரௌடி தான்! | If Rowdyism Is For People Then I Am A Rowdy Too

ரௌடி என அழைப்பது மகிழ்ச்சி

“கடந்த காலங்களில் இலஞ்ச, ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்டம் செயற்படும். அவர்களின் முகவரி மகசின் சிறைச்சாலையென மாறுவது உறுதியாகும்.

தமிழர் பகுதியில் இரு காவாலிகளை தூக்க கொழும்பிலிருந்து வந்த விசேட குழு!

தமிழர் பகுதியில் இரு காவாலிகளை தூக்க கொழும்பிலிருந்து வந்த விசேட குழு!

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களும் கம்பி எண்ணி வருகின்றனர். அதேபோல படுகொலைகளில் ஈடுபட்டவர்கள், ஆட்கடத்தல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சட்டம் செயல்படும்.

நாம் இவ்வாறு செயற்படும்போது தேசிய மக்கள் சக்தி அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக கொக்கரிக்கின்றனர். எமக்கு எவருடனும் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. குற்றமிழைத்தவர்களுக்கு மன்னிப்பும் கிடையாது. சட்டத்தை நாம் கையில் எடுக்கமாட்டோம். நீதிமன்றம் ஊடாகவே அதற்குரிய பணி இடம்பெறும். வடக்கிலும் மண் கடத்தல் காரர்கள் உள்ளனர்,

மக்களுக்காக ரௌடித்தனம் எனில் நானும் ரௌடி தான்! | If Rowdyism Is For People Then I Am A Rowdy Too

ஆட்களை கடத்தியவர்கள் உள்ளனர். ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் இருக்கின்றார்கள். மக்களின் காணிகளை அபகரித்தவர்கள் இருக்கின்றார்கள்.

இவர்களுக்கு எதிராகவும் வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் நிம்மதியை சீர்குலைத்தவர்கள், தற்போது நடுங்க ஆரம்பித்துள்ளனர். சந்திரசேகரன் ரௌடி எனவும் கூறத்தொடங்கியுள்ளனர். என்னை ரௌடி என அழைப்பது மகிழ்ச்சி.

பசிக்கு உணவருந்த சென்ற தமிழர்கள் மீது தாக்குதல் ; தென்னிலங்கையில் பயங்கரம்!

பசிக்கு உணவருந்த சென்ற தமிழர்கள் மீது தாக்குதல் ; தென்னிலங்கையில் பயங்கரம்!

மக்களுக்காக செயற்படுகின்றபோது, மக்களுக்காக குரல் கொடுக்கின்றபோது, மக்களுக்காக எம்மை அர்ப்பணிக்கின்றபோது அதை பார்த்து ரௌடித்தனம் என்கின்றனர்.

மக்களுக்காக ரௌடித்தனம் எனில் நானும் ரௌடி தான்! | If Rowdyism Is For People Then I Am A Rowdy Too

இதுதான் ரௌடித்தனம் எனில் அதனை ஏற்றுக்கொள்ள நான் தயார். கடந்தகாலங்களில் ரணில் விக்கிரமசிங்கவின் பைல்களை தூக்கி திரிந்தவர்கள்தான் இப்படி சொல்கின்றனர்.

புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டபோது அதனை வரவேற்றவர்கள், இன்றைக்கு தாங்கள்தான் புலிகள் அமைப்பின் அர்ப்பணிப்புமிக்க தலைவர்கள் எனக் கூறிக்கொள்கின்றனர். புலிகள் காலத்தில் துரோகி முத்திரை குத்தப்பட்டவர்கள் இவர்கள் என்றார்.

யாழிற்கு ஜனாதிபதி விஜயம்; மக்களை அச்சுறுத்திய பொலிஸார்!

யாழிற்கு ஜனாதிபதி விஜயம்; மக்களை அச்சுறுத்திய பொலிஸார்!

மேலும் இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்.மாநகர சபையின் வேட்பாளர் சு.கபிலன் மற்றும் அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்  

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US