டெக்சாஸ் சம்பவம் அடங்குவதற்குள் அமெரிக்காவில் மற்றுமொரு பரபரப்பு சம்பவம்!
டெக்சாஸ் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அடங்குவதற்குள் அமெரிக்காவில் 5 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் பாடசாலைக்குள் துப்பாக்கியால் சுடுவேன் என மிரட்டிய மற்றுமொரு சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உவால்டே நகரில் உள்ள ராப் தொடக்கப்பள்ளியில் கடந்த வாரம் சல்வடார் ரொமஸ் என்ற 18 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 குழந்தைகள், மற்றும் இரு ஆசிரியைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த பரபரப்பான சூழ்நிலையில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்துவேன் என்று 5 வகுப்பு மாணவன் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடா மாகாணம் கேப் கரொல் நகரில் உள்ள பெட்ரிட் ஆரம்ப பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் டேனியல் மார்கஸ் (வயது 10). இந்த சிறுவன், தனது பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து மிகப்பெரிய அளவில் துப்பாக்கிச்சூடு நடத்துவேன் என்று மெசேஜ் மூலம் மிரட்டல் விடுத்துள்ளான்.
இதனை தொடர்ந்து மார்கசை கைது செய்த பொலிசார் சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸ் தரப்பில் கூறுகையில், உவால்டே துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு இந்த மாணவனின் மனநிலையில் வெறுப்புணர்வு இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.