வடக்கு ஆளுநர் ஜீவன் அந்தர் பல்டி
ஆரிய குளத்தில் இராணுவத்தினர் வெசாக் கூடு அமைப்பதற்கு அனுமதி கொடுக்கா விட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க வேண்டிவரும் என எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வடக்கு ஆளுநர், ஆரியகுளம் பகுதி விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ் மாநகர சபை விடயம் தொடர்பில் நான் தற்போது பேச விரும்பவில்லை. எனினும் நான் மாநகர சபையை கலைப்பதாக யாரிடமும் கூறவில்லை.
எனவே அந்த விடயம் தொடர்பில் நான் பேச வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்தார்.
ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கையை யாழ்.மாநகர சபை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஆரியகுளத்தில் வெசாக் கூடு கட்டுவதற்கு அனுமதிக்காவிட்டால் யாழ்.மாநகர சபையை கலைக்க நேரிடும் என வடக்கு மாகாண ஆளுநரால் எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
ஆரியகுளத்தில் வெசாக் கூடு: யாழ்.மாநகர சபைக்கு ஆளுநரின் கடும் எச்சரிக்கை

