சினிமாவில் நடிக்கப் போவதில்லை ; நடிகர் ரவி மோகன் அதிரடி அறிவிப்பு
மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து வழக்கு முடியும் வரை சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று நடிகர் ரவி மோகன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அவரது தோழி கெனிஷா சென்னையை விட்டு வெளியேறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ரவி மோகன், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதன்போது அவர் கூறுகையில்,

எனக்குச் சினிமா நடிகர் என்ற இமேஜ் தேவையில்லை. மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கிடைக்கும் வரை நான் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை. அதுவரை எனது புதிய படங்கள் எதுவும் திரைக்கு வராது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சாதுவாக இருந்த என்னைச் சிலர் சீண்ட முயற்சிக்கின்றனர். எனது குடும்பத்தினரைப் பற்றி அவதூறாகப் பேசினாலோ அல்லது சீண்டினாலோ என்னால் சும்மா இருக்க முடியாது என நடிகர் ரவி மோகன் கூறியுள்ளார்.