சிம்பு திருமணத்திற்கு பிறகுதான் நான் திருமணம் செய்து கொள்வேன்! பிரபல இளம் நடிகர்
சென்னையில் இடமபெற்ற விழா ஒன்றில் உங்களுக்கு திருமணம் எப்போ என கேட்ட கேள்விக்கு பிரபல இளம் நடிகர் ஜெய் சிம்புவின் திருமணம் முடிந்த கையேடு என் திருமணம் நடைபெறும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சிம்புவின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் ஒருவராக இருப்பவர் ஜெய். சிம்புவை போலவே சினிமாவில் காதல் சர்ச்சை, முதல் திரைப்படங்களுக்கு ஒழுங்காக ஒத்துழைப்பு தருவதில்லை என பல பிரச்சனைகளில் சிக்கி அதில் இருந்து மீண்டவர்.

ஆனால் தற்போது நல்ல பிள்ளையாக, பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி, எண்ணித்துணிக, சிவசிவா, குற்றமே குற்றம் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிகர் விஜய்க்கு தம்பியாக குணச்சித்திர வேடத்தில் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், இதை தொடர்ந்து சசிகுமார் இயக்கத்தில் இவர் நடித்த, 'சுப்ரமணியபுரம்' இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
கதையை ஒழுங்காக தேர்வு செய்து நடிக்காததால் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. இனினும் தற்போது அழுத்தமான கதைகளை தேர்வு செய்வதன் மூலம் மீண்டும் பல படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று சென்னை திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் விழா ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களிடம் பேசிய ஜெய், செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு மிகவும் கலகலப்பாக பதிலளித்தார்.
குறிப்பாக 'சிம்புவுக்கு திருமணம் ஆன பிறகு என்னுடைய திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்றும், அனேகமாக சிம்புவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என தெரிவித்துள்ளார்.