மீண்டும் தந்தையிடம் வந்துவிட்டேன் ; ஹரின் உருக்கம்
மீண்டும் திரும்பி செல்வதற்காக அல்ல தங்குவதற்காகவே வந்தேன் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அத்துடன் இது தனது தந்தை வீடு என தெரிவித்த ஹரின் பெர்னாண்டோ, தந்தை வீட்டிற்கு வந்ததாக உணர்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐ. தே. கட்சியின் 76ஆவது ஆண்டு நிகழ்வு
ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஹரின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐ.தே.க மேடைக்கு வந்ததும் சற்றும் சங்கடமாக உணரவில்லை உணராமல், மீண்டும் தந்தையிடம் வந்துவிட்டதை போன்று உணர்கிறேன்.
மீண்டும் வந்தால் ஹரீனையும் மனுஷவையும் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என சிலர் சொல்கிறார்கள் என்றும், ஆனால் நாங்கள் திரும்பிச் செல்ல போவதில்லை எனவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.