போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன; மஹிந்த வெளியிட்ட அறிவிப்பு
தான் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான பிரசாரங்கள் உலாவருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் வழமை போன்றே நலத்துடன் காணப்படுவதாகவும் கௌரவ பிரதமர் மஹிந்த தெரிவித்தார்.
அதோடு நோயாளியை பார்ப்பதற்கேனும் தான் இத்தினங்களில் வைத்தியசாலைக்கு செல்லவில்லை எனத் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தான் உடற்பயிற்சியில் ஈடுபட்டு சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை பிரதமர் நோய்வாய்ப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.