நானும் சாதாரண மனிதன் தானே: வைரலாகும் சுந்தர் பிச்சையின் காணொளி
கூகுள் (CEO) சுந்தர் பிச்சையின் (Sundar Pichai) அன்மியூட் செய்யாமல் பேசிய காணொளி ஒன்று இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கும் (Google CEO Sundar Pichai) நமக்கும் ஒரு சில சமயங்களில் பெரிதாக வேறுபாடு இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால், அவரே அதைக் கூறியுள்ளார். 'நானும் உங்களைப் போல ஒருவன் தான்' என்று இந்தியாவில் பிறந்து, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் தொடங்கிய காலத்தில் இருந்து இணையம் வழியாகத்தான் பலரும் பல காரணங்களுக்காக சந்தித்து வருகிறோம். அந்தவகையில் மீட்டிங் நடக்கும் பொழுது அல்லது இணையம் வழியாக மற்றவருடன் உரையாடும் பொழுது, சில நேரங்களில் மியூட் செய்ய அல்லது அன்மியூட் செய்ய மறந்து விடுவோம். எவ்வளவு பெரிய நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும் அவரும் நம்மைப் போன்ற ஒருவர் தான். கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் அன்மியூட் செய்யாமல் பேசிய காணொளி ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்ற்து.
Always remember to unmute...thanks @KermitTheFrog for joining us on @YouTube #DearEarth and chatting about some of our shared interests:) ??? https://t.co/RCIUnPcltK pic.twitter.com/cEd6BjkA6H
— Sundar Pichai (@sundarpichai) October 27, 2021
சுந்தர் பிச்சை கெர்மிட் (Kermit the Frog) என்ற ஒரு தவளையுடன் பேசிய இரண்டு நிமிட காணொளி உரையாடலை பகிர்ந்துள்ளார். இந்த காணொளி யூடியூபில் புதிய டியர் எர்த் என்ற கருப்பொருளின் அடிப்படையில் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு நம்முடைய சுற்றுசூழலை மேம்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வின் ஒரு பகுதி ஆகும்.
கெர்மிட் தவளை சுந்தர் பிச்சையை (Sundar Pichai) முதலில் காணொளியில் வரவேற்கிறது. ஆனால் அதற்கு சுந்தர் பிச்சை தன்னுடைய காணொளியை அன்மியூட் செய்யாமலேயே பதிலளித்துள்ளார். உடனேயே கெர்மிட் தவளை, "சுந்தர் நீங்கள் வீட்டில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என்னால் நம்பவே முடியவில்லை கூகுளின் சிஇஓ இப்போது என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார் ஆனால் அவர் ம்யூட்டில் இருக்கிறார்" என்று ஆச்சரியப்பட்டது.
இதேவேளை சுந்தர் பிச்சை தன்னுடைய காணொளியை அன்மியூட் (Unmute) செய்யவில்லை என்பதை உணர்ந்தார். சிரித்துக்கொண்டே கெர்மிட்டிடம் ஸா சொல்லி "நான் ம்யூட்டில் இருந்தேன், கவனிக்கவில்லை. இந்த ஆண்டு இதே போல பலமுறை நடந்துள்ளது நானும் மற்றவர்களைப் போல தானே" என்று அவர் புன்னகையோடு பதிலளித்துள்ளார்.
காணொளியில் சுந்தர் பிச்சையும் குறித்த தவளையும் டியர் எர்த் சீரிஸ் (Dear Earth Series) பற்றி பல விடயங்களை விவாதித்தனர். சுற்றுப்புற சூழலை, பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு எல்லா உயிரினங்களும் நீண்ட காலம் வாழ்வதற்கு தகுதியானபடி மாற்றுவதற்கான முன் முயற்சியாக யூரியூப் நிறுவனம் பல்வேறு பிரபலமான கார்ட்டூன் கேரக்டர்களை வைத்து இதைப் போன்ற உரையாடல்களை வெளியிட்டு வருகிறது.
மேலும் அந்த காணொளியில் சுந்தர் பிச்சையை பாராட்டி பல விடயங்களை பேசியுள்ளது.