மனைவி கொலை விவகாரம்; 14 வருடத்திற்குப் பிறகு சிக்கிய நபர்!
மனைவியைக் கட்டையால் அடித்து கொன்ற கணவரை 14 வருடத்திற்கு பிறகு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறித்த நபர் 2007 ஆம் ஆண்டு தலவாக்கலை தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், அப்போது தலவாக்கலை வட்டகொட தோட்டத்தில் வசித்து வந்ததாகவும் தெரிய வந்தது.
தாக்குதலின் பின்னர் அவரது மனைவி உயிரிழந்த போது சந்தேகநபருக்கு 49 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 74 வயதுடைய சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய துங்கம பிரதேசத்தில் 14 வருடங்களாக வசித்து வருவதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் நேற்று பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதுடன், இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.