மட்டக்களப்பில் மனைவியை சுட்ட கணவன்; சம்பவத்தால் ஷாக்!
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவில் கணவனின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய 27 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று (30) இரவு ஆற்றங்கரை வீதி புச்சாக்கேணியில இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தகராறு
குடும்பத்தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் மனைவி தமது தாயாருடன் வாழ்ந்து வந்தவேளை மனைவியை பலி தீர்க்கும் முகமாக தோணிதாட்ட மடு எனும் இடத்தில் வசித்து வந்த கணவர் கட்டுத் துப்பாக்கியுடன் வந்து அவரை சுட்டுள்ளார்.
கணவன் துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ள நிலையில், பொலிஸார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.