500 ரூபாவுக்காக மனைவியை விற்ற கணவன்!
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தனது கணவர் தன்னை வேறொரு நபரிடம் 500 ரூபாவுக்கு விற்று விட்டதாக 21 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி கூறுகையில் ,
எங்களிடம் இளம்பெண் ஒருவர் புகார் அளிக்க வந்தார். அதில், செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி இரவு 9 மணியளவில் அங்குள்ள லக்கி ஹோட்டலுக்கு அப்பெண் தன் கணவர் தீரஜ் ஜாங்கிட் உடன் சென்றுள்ளார்.
இதன்போது அங்கு வந்த சோனு சர்மா என்பவரிடம் தன் கணவர் 500 ரூபாவை பெற்றுக் கொண்டு, அந்த நபருடன் பெண்ணை போக கூறியுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான பகுதிக்கு அழைத்துச்சென்ற சோனு சர்மா அப்பெண்ணை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அப்பெண் புகாரில் தெரிவித்ததாக பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.
அந்த புகாரை அடுத்து பெண்ணின் கணவர் தீரஜ் ஜாங்கிட் மற்றும் சோனு சர்மாவை அடுத்த 24 மணி நேரத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் சிகார் பகுதியிலுள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வெறும் 500 ரூபாவுக்காக மனைவியை கணவர் வேறொரு நபருக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.