பிள்ளைகளின் கண்முன்னால் தாய்க்கு கணவன் அரங்கேற்றிய சம்பவம் ; பறிபோன உயிர்
குருநாகல், நிகவரட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கணவரின் தாக்குதலில் நேற்று (14) அதிகாலையில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் நிக்கரவெட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை
உயிரழந்தவர் தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வீட்டில் இருந்த நிலையில், அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து, இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றத்தைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 49 வயதான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிக்கரவெட்டிய பொலிசார் தரப்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.