மருமகனுடன் சேர்ந்து மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் ; கொலைக்கான காரணத்தால் அதிர்ச்சி
கிராண்ட்பாஸ் பகுதியில் 65 வயதுடைய பெண்ணொருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு பிள்ளைகளின் தாயொருவரை, அவருடைய இரண்டாவது கணவர் கூரிய ஆயுதம் கொண்டு தாக்கிக் கொலை செய்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை
கொலை செய்தபின், அவரது உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி, மருமகனுடன் இணைந்து ஸ்டேட்புர பகுதியில் வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் இருவரையும் கிராண்ட்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் போதைப்பொருள் விற்பனை செய்பவர் என ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
அத்துடன் கொல்லப்பட்ட பெண் வேறொரு நபருடன் தொடர்பு வைத்திருந்தமையே கொலைக்குக் காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.