23 வயதான கணவன் மருத்துவமனையில்; விலையுயர்ந்த பொருட்களுடன் மனைவி காதலனுடன் ஓட்டம்!
களுத்துறையில் மனவியின் தகாத உறவு காரணமாக விசம் அருந்திய 23 வயதான கணவன் மருத்துவமனையில் இருந்த போது மனைவி காதலனுடன் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில் வீட்டில் இருந்த பணம் உட்பட அனைத்து விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு கள்ளக் காதலனுடன் மனைவி ஓடிவிட்டதாக கணவர் பொலிஸில் முறைபாடு அளித்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மனைவியின் கள்ள உறவு
23 வயதான கணவன் , களுத்துறை பஹல நெபடவில் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் வசித்து வந்துள்லார்.
இந்நிலையில் கடந்த , 27 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் நெபட நகரத்திலுள்ள வீட்டுக்குத் திரும்பியபோது, அவரது மனைவி வேறொருவருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததால் அதிர்ச்சியடைந்து விஷம் குடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து கணவன் களுத்துறையில் உள்ள நாகொட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 1 ஆம் திகதி காலை 11.00 மணியளவில் வீடு திரும்பியுள்லார்.
இதன்போது, வீட்டில் தனது மனைவி மற்றும் மகள் அங்கு இல்லை என்றும், தனது பணம், தங்க நகைகள் மற்றும் வீட்டுப் பொருட்களை ‘பட்டா’ வகை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதாகவும் அவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
தங்கை நகைகள் பெறுமதியான பொருட்கள்
தனது மனைவியின் தொலைபேசிக்கு அழைத்ததாகவும், ஆனால் அவர் பதிலளிக்கவில்லை என்றும், தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறி அவள் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அவர் பொலிசாரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது வணிக நோக்கங்களுக்காக வீட்டில் இருந்த ரூ.290,000 ரொக்கம், ரூ.97,000 மதிப்புள்ள குளிர்சாதன பெட்டி, ரூ.375,000 மதிப்புள்ள தங்க நெக்லஸ், ரூ.625,000 மதிப்புள்ள வளையல், ஒரு அலமாரி, ஒரு டிரஸ்ஸிங் டேபிள், தேசிய அடையாள அட்டை மற்றும் திருமணச் சான்றிதழ் ஆகியவற்றை மனைவி எடுத்துச் சென்றதாக கணவர் பொலிசாரிடம் கூறியிருந்தார்.
இதனையடுத்து தெபுவான காவல் நிலையத்தினர் காதலனுடன் தலைம்றைவான பெண்ணை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.