விஷம் அருந்திய கணவனுக்கு காதல் மனைவி கொடுத்த ட்விஸ்ட் ; இறுதியில் அனுப்பிய குறுஞ்செய்தி
களுத்துறையில் குடும்ப தகராறு காரணமாக விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 23 வயதுடைய கணவன் வீடு திரும்பும் போது மனைவி திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்ட நபருடன் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் வெளியில் சென்று திரும்பிய போது, அவரது மனைவி வேறொரு நபருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தமையினால் கணவன் அதிருப்தி அடைந்துள்ளார்.
தங்க நகைகளுடன் ஓட்டம்
இதனால் மன விரக்தியடைந்து உயிரை மாய்த்துக் கொள்ள விஷம் அருந்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் களுத்துறையில் உள்ள நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நான்கு நாட்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது மனைவியும் மகளும் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது. தங்க நகைகள் மனைவி வீட்டிலிருந்து பணம், தங்க நகைகள், தேசிய அடையாள அட்டை மற்றும் திருமணச் சான்றிதழ் உள்ளிட்ட பல மதிப்புமிக்க பொருட்களை லொறியில் ஏற்றிக்கொண்டு அயல் வீட்டு நபருடன் தப்பி சென்றுள்ளார்.
தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என கணவனுக்கு குறுந்தகவல் ஒன்றையும் மனைவி அனுப்பியுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.