மனைவி கண் முன்னே விபத்தில் உயிரிழந்த கணவன் : முன்னால் இராணுவ சிப்பாய் கைது
அனுராதபுரம் கெக்கிராவை பிரதேசத்தில் பாரவூர்தியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.
இந்தக் கோரச் சம்பவம் அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று (30) இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது காரைச் செலுத்திச் சென்ற கெப்பிட்டிக் கொல்லாவை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
காரின் முன் ஆசனத்தில் அமர்ந்து சென்ற அவரின் மனைவி (வயது 29) படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த இளம் தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது என்றும், மேற்படி குழந்தை இவர்களுடன் காரில் பயணிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
விபத்துடன் சம்பந்தப்பட்ட பாரவூர்தியின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் 64 வயதுடைய முன்னாள் இராணுவச் சிப்பாய் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.