குடும்பத் தகராறில் மனைவியின் முக்கை அறுத்த கணவர்!
கேரளா - திருவனந்தபுரத்தில் குடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் தனது மனைவியின் மூக்கை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார்.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு
இவருக்கு சுதா என்ற மனைவியும் 3 பெண்பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனில் தனது குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது உறவினரது வீட்டில் இடம்பெற்ற துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சுதா அங்கு சென்றுள்ள நிலையில் இதனை அறிந்த சுனில், அங்கு சென்று சுதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது ஆத்திரமடைந்த சுனில், சுதாவின் முக்கை கத்தியால் அறுத்துவிட்டு தப்பிச் சென்றுன்றார். இதனையடுத்து படுகாயமடைந்த சுதா, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பிச்சென்ற அனில் குமாரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.