மனைவி கொலையில் 12 அண்டுகளின் பின் சிக்கிய கணவன்
மனைவியை மன்னா கத்தியால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் தலைமறைவாகியிருந்த கணவர், 12 வருடங்களின் பின் மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. 37 வயது பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரண தண்டனை
சம்பவத்தையடுத்து உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், ஒரு வருடம் கழித்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றில் ஆஜராகாத போதிலும் பலப்பிட்டி நீதிமன்றம் சந்தேக நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமறைவாகியுள்ள நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், வெலிகம விஹாரையொன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரேவதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகும் சனி் ; இந்தராசிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் ; உங்க ராசி இருக்கா?
தமிழர் பகுதியில் பல இலட்சம் பெறுமதியான வாயில்லா ஜீவன்களுக்கு நடந்த சம்பவம் ; ஏற்பட்ட பெரும் பாதிப்பு