கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவன் ; அடிமை போல் துன்புறுத்தப்பட்ட மனைவி
இந்தியாவில் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வசிக்கும் ஜெட்ரேலோ ஜேக்கப், தனியார் நிறுவனத்தில் உயர்நிலை பணியாற்றும் கணவர், கடந்த சில வருடங்களாக திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாக புகார் வெளியாகியுள்ளது.
கணவரின் அடிக்கடி மனைவியை சாதி பெயரை கூறி மனஅழுத்தம் ஏற்படுத்தி, உடல் மற்றும் மன ரீதியிலும் துன்புறுத்தியதாக மனைவி பொலிஸில் புகார் அளித்தார்.
மேலும், ஜேக்கப் மற்றொரு பெண்ணுடன் பழகி, சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவேற்றியதும் குடும்ப பிரச்சனையை தீவிரமாக்கியது.

இந்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு சைபர் கிரைம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
விசாரணையில், ஜேக்கப் தனது கள்ளக்காதலியுடன் ரிசார்ட்டில் தங்கியிருப்பதாக தகவல் மனைவியால் வழங்கப்பட்டது.
பொலிஸார் உடனடியாக அதிரடி சோதனை நடத்தி, அந்த அறையில் ஜேக்கப் மற்றும் கள்ளக்காதலியை பிடித்து கைது செய்தனர்.
தற்போது ஜேக்கப்பை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர், மேலும் வழக்கு தொடர்கிறது.