யாழில் கலா மாஸ்டரின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்: மனம் உடைத்து போன கணவர்
கடந்த மாதம் யாழ்ப்பாணம் - முற்றவெளி மைதானத்தில் தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் பங்குபற்றிய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியும் நட்சத்திர கலைவிழா நிகழ்வும் நடைபெற்றிருந்தது.
இந்த இசை நிகழ்வை நடிகை ரம்பாவின் கணவரும், பிரபல தொழிலதிபருமான இந்திரகுமார் பத்மநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.
இதேவேளை, குறித்த இசை நிகழ்ச்சிக்கு தென்னிந்திய திரை நட்சத்திரங்களை இலங்கைக்கு அழைத்து வரும் பணிகள் மற்றும் முற்றுவெளி மைதானத்தில் ஏற்பாடுகளையும் நடன இயக்குநர் கலா மாஸ்டர் மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து, இசைநிகழ்ச்சி சீரான ஒழுங்குபடுத்தல் இன்மை காரணமாக குழப்பத்தில் முடிந்த நிலையில் கலா மாஸ்டரின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஆங்காங்கே ஓட்டப்பட்டன.
இச்சம்பவம் முடிந்து சில நாட்களுக்கு பிறகு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் தொடர்பில் கலா மாஸ்டரிடம் யூடியூப் சேனல் ஒன்று நேரடியாக வினவியபோது, கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை பார்த்துடன் என்னை விட என்னுடைய கணவர் மனம் உடைந்து போனார் என கூறியுள்ளார்.