ஆற்றில் மிதந்த மனிதக் கால்: விசாரணைகள் ஆரம்பம்
அக்குரெஸ்ஸ, மாரம்ப, கல்பல பாலத்திற்கு அருகிலுள்ள நில்வளா நதியில் இன்று (28) பிற்பகல் மிதந்து கொண்டிருந்த நிலையில் ஒரு ஆணின் கால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள் ஆரம்பம்
அக்குரஸ்ஸ மரண விசாரணை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், அக்குரஸ்ஸ பொலிஸார் குறித்த மனித காலை பரிசோதனைக்காக மாத்தறை பொது மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது ஒரு கொலையா அல்லது முதலையின் பிடியில் சிக்கி ஆற்றில் மிதந்த ஒரு காலின் பகுதியா என்பதை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், வெலிஹேன பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய ஒருவரை மூன்று நாட்களாகக் காணவில்லை என இன்று மதியம் பொலிஸாருக்கு புகார் கிடைத்துள்ளதாகவும், மீட்கப்பட்ட கால் குறித்த ஆணுடையதாக இருக்கலாம் என்ற நோக்கில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.