இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனையை அணுகுவது எப்படி? இலங்கையர் ஒருவரின் பதிவு
பாலஸ்தீனத்தை யூதர்கள் ஒன்றும் பலவந்தமாக ஆக்கிரமித்தவர்கள் அல்ல. அவர்களும் அந்த மண்ணின் மாந்தர்கள்தான். ஒரு தகப்பனின் (ஆபிரகாமின்) பிள்ளைகளது வாரிசு சண்டையே இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை.
பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்களை, ஆட்சி செய்தவர்கள் அடிமையாக்கி விரட்டினார்கள். அதனால் அவர்கள் உலகெங்கும் அகதிகளாக போனார்கள். அப்படி போனவர்கள் திரும்பி வந்து நாடொன்றை உருவாக்கிய போதே, இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை தோன்றியது.
உதாரணமாக, வடக்கு - கிழக்கில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் துரத்தப்பட்டார்கள். அப்படி தாங்கள் வாழ்ந்த இடங்களை விட்டுச் சென்றோர் இலங்கையின் பல பாகங்களில் அகதிகளாக சிதறி வாழத் தொடங்கினார்கள். வெளிநாடுகளுக்கும் சென்றனர். போர் நின்ற போது மீண்டு தம் நிலங்களுக்கு வந்த போது, அவர்களுக்கு அவர்களது நிலம் உரித்தில்லை என சொல்ல முடியுமா?
அதேபோல தமிழர்களும் தம் நிலங்களை விட்டு புலம் பெயர்ந்தார்கள். அவர்கள் திரும்பி வந்தால், அவர்களது நிலம் அவர்களுக்கு சொந்தமில்லை என ஆக்கிரமித்தோர் சொன்னால் சரியா?
பழைய ஏற்பாடு அல்லது ஆதியாகமத்தை வாசித்தால் யூதேயா இனத்திலிருந்தே, கிறிஸ்தவமும், இஸ்லாமும் உருவானது புரிகிறது.
யூதர்கள், கிறிஸ்தவர்கள் அல்ல. ஏசு கிறிஸ்துவை யூதர்கள் ஏற்றதில்லை. அநேகர் யூதர்களை, கிறிஸ்தவர்கள் என நினைக்கிறார்கள். அது தவறு. யூத மதம் வேறு. கிறிஸ்தவ மதம் வேறு. இதனால்தான் இந்த சண்டையை அநேகர் தப்பாக பார்க்கிறார்கள்.
யூதர்களின் புனிதமாக கருதப்பட்ட, சாலமனின் புதுப்பிக்கப்பட்ட கோயில். யூதர்கள் புனித இடமாக கருதிய ஜெருசலேம். இவையே யூதர்கள் உலகெங்கும் சிதறடிக்கப்பட காரணம்.
யூதர்கள் தங்களை கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவர்கள், தாங்களே கடவுளின் பிள்ளைகள் ௭ன கூறினார்கள். அவர்கள் மோசஸ் அருளிய பத்து கட்டளைகளை, தோராவை பின்பற்றினர். அவர்களின் கடவுள் ஜெகோவா.
முதலில் இயேசுவும் ஒரு யூதரே. அவரை இறை தூதர் ௭ன்று மக்கள் கூறியுதும், இயேசு, சாலமனின் புதுப்பிக்கப்பட்ட கோயில் இடியும், அதை தான் மீண்டும் கட்டுவேன் ௭ன்றுரைத்ததும் இயேசுவை சிலுவையில் அறைய காரணமாயிற்று.
இதுவே யூதர்கள் சிதறடிக்கப்பட காரணம். இயேசுவை கொன்ற யூதர்கள் ௭ன்ற கறை அவர்கள் மேல் படிந்தது.
இரண்டாவது மதமாற்றம்.
ரோம் மிகப்பெரிய பேரரசு. அப்போதைய ரோமின் மன்னன் கான்ஸ்டான்டைன் கிறிஸ்துவத்தை தழுவியது யூதர்களுக்கு பெரும் சிக்கலாகிப் போனது. அவர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். இல்லையெனில் யூதர்கள் நாடுகடத்தப்பட்டனர்.
அதைப்போலவே கிறுஸ்துவ, முஸ்லீம் மதங்களின் ஆதிக்கம் யூதர்களை சிதறடித்தது. யூதர்கள் பிற மதங்களை சார்ந்தோரை யூதர்களாக ஏற்கமாட்டார்கள். ௭ல்லா இடங்களிலும் இதனால் துரத்தப்பட்டனர். கொன்று குவிக்கப்பட்டனர்.
ரோமியர்க்கும், யூதர்களுக்கும் நடந்த யுத்தம், சிலுவை போர்கள் அனைத்தும் யூதர்களுக்கு சாதகமாக அமையவில்லை. இதனால் யூதர்கள் வீழ்ந்தனர்.
யூதர்கள் தங்களுக்கு சொந்த நாடு வேண்டும் ௭ன தீர்மானித்தீர்கள். அதற்காக பாலஸ்தீனத்தில் பல நில வங்கிகளை நிறுவினர். நிலவங்கி அரேபிய முஸ்லிம்களுக்கு நிலத்திற்கு பணம் கொடுக்கும். அதை அவர்களால் திருப்பி தர இயலாது. அந்த நிலங்களை தன்வசப்படுத்தும். நிலவங்கிக்கு பணம் யூதர்களால் உலகெங்கும் இருந்து அனுப்பப்படும்.
இப்படி நான்கு ஆண்டுகளில் பெரும்பகுதியை தன்வசப்படுத்தி யூதர்கள் பாலஸ்தீனில், இஸ்ரேல் ௭ன்ற நாட்டை உருவாக்கினர். இன்று வரை நடக்கும் இஸ்ரேல், பாலஸ்தீனம் பிரச்சனைக்கு இதுவே காரணம். இது நிலப்பிரச்சனை. மதப் பிரச்சனை இல்லை.
யூதர்களின் பூர்வீக இடம் பாலஸ்தீனம்.முஸ்லிம்கள் யூதர்கள்,கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் புனித தலமாக விளங்கும் ஜெருசலேம் இதனுள் அடக்கம். அப்போது இஸ்ரேல் இதன் ஒரு பகுதி. இதுவே ஜூதேயா என அழைக்கப்பட்டது.
இவர்களது வேதம் தோரா. மொழி ஹீப்ரு. கடவுள் ஜெஹோவா.ஒரே கடவுள் என்ற கொள்கை. மேற்கண்ட 3 மதங்களிலும் சொல்லப்படுபவை ஒன்றாகும் .
அதாவது முதலில் ஆதாம் ஏவாள் வரலாறு. பின் ஆப்ரஹாம் (இப்ராஹிம்)இவரது இரு மனைவியர் சாரா, ஆகார். முதல் மனைவியின் மகன் ஐசக். இரண்டாம் மனைவியின் மகன் இஸ்மாயில்.
இரண்டாம் மனைவியும் மகனும் விரட்டப்பட்டனர். ஐசக்வழியில் வந்தவர்கள் யூதர்கள் . இஸ்மாயில் வழி வந்தவர்கள் இஸ்லாமியர்கள் .
யூதர்களின் கடவுளும் இஸ்லாமியரின் கடவுளும் ஓரே கடவுள்தான். அது அல்லாஹா தான். இப்படி இருந்தும் இவர்கள் அடித்துக்கொள்வதற்கு காரணம் , மூஸா நபி மீது உள்ள பாசம் மற்றும் மூஸா நபியின் இடத்தில் அடுத்த நபியை ஏற்றுக்கொள்ளாதது தான்.
ஜெருசலம் யாருடையது என்கிற கேள்வி இருக்கும் வரை பாலஸ்தீனுக்கு அமைதி கிடையாது. மனதளவில் அனைவரும் உணர்ந்த இந்த உண்மையைச் செயல் அளவிலாவது கடைப்பிடிக்க இரு தரப்பினரும் தயாராகிவிட்டால், பாலஸ்தீனின் சுதந்திரம் கைக்கெட்டும் தூரம்தான். இல்லையென்றால்..? அது கானல் நீர்தான் என குறித்த பதிவை முகநூலில் இலங்கையை சேர்ந்த ஜீவன் பிரசாத் என்பவர் பதிவிட்டுள்ளார்.