பிக் பாஸில் போட்டியாளர் ராபர்ட் மாஸ்டர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிலையில் கடந்த 5 சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 9-ம் திகதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தொடங்கி 49 நாளாக விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.
இதேவேளை கடந்த சீசன்களைப்போல இந்த சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்றார்.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி என தொடர்ந்து பலர் வெளியேறினர். இந்த வாரம் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறுவர் என பிக்பாஸ் ரசிகர்கள் உறுதியாக உள்ளனர்.
மேலும் அவர் ரச்சிதாவிடம் செய்த விடயங்கள் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்த அதுவே குறைவான வாக்குகள் அவர் பெற காரணமாக இருந்தது.
நன்கு விளையாடக் கூடிய ஒரு நபர் இப்படி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது சிலருக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.
அத்தோடு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு வாரத்திற்கு ரூ. 1.50 முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
இதை வைத்தே அவருக்கான சம்பளம் கொடுக்கப்படும் என்கின்றனர்.
இருப்பினும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டும் சம்பளம் எப்போது இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்களுக்கு எந்த இடத்திலும் இதை பற்றி பேசியதும் இல்லை.