பாதுகாப்பு இல்லையெனில் சிற்றுண்டிச்சாலைக்கு வந்தது எப்படி?
நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு தமக்குப் பாதுகாப்பில்லை என கூறும் ஐக்கிய மக்கள் சக்தியினர் நாடாளுமன்றத்தில் உள்ள எம்.பிக்களுக்கான சிற்றுண்டிச்சாலைக்கு மாத்திரம் எவ்வாறு வருகிறார்கள் என ஆளுங்கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர் மொஹமட் முஸாம்மில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றையஅமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பில்லை என கூறியே ஐக்கிய மக்கள் சக்தியினர் சபை நடவடிக்கைகளை புறக்கணித்துள்ளனர். ஆனால் இன்று காலை அக்கட்சியின் எம்.பிகள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிற்றுண்டிச்சாலைக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை என கூறுபவர்கள் எவ்வாறு பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலைக்கு வந்தனர் எனவும் மொஹமட் முஸாம்மில் கேள்வி எழுப்பினார்.