நள்ளிரவில் தாக்கிய இடி மின்னல்; மன்னாரில் வீடுகள் சேதம்!
சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் 5 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், 5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்கபப்ட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இடி மின்னல் தாக்கத்தால் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், கூரையின் பகுதிகள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளன.
]
நள்ளிரவில் தாக்கிய இடி மின்னல்
வீடுகளில் இருந்த மின்சார உபகரணங்களும் செயலிழந்து உள்ளதுடன், இதனால் குறித்த குடும்பங்களின் வீடுகள் மற்றும் உடைமைகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் மற்றும் சாந்திபுரம் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டுள்ளனர்.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
இதேவேளை,மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் பல பாகங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது.

மேலும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் உரிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
சீரற்ற காலநிலை செய்திகள்
சீரற்ற காலநிலை; பாடசாலைகளை மூடுவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு
தொடர்மழையால் பெருக்கெடுக்கும் ஆறுகள் ; மக்களே அவதானம்!
அர்னாப் புயல்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!