விடுதி ஒன்றில் திடீர் சோதனை ; 32 சீன நாட்டவர்கள் செய்து வந்த சம்பவம் அம்பலம்
பாணந்துறையில் இணையத்தள நிதி மோசடிகளில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய விடுதியொன்றை சோதனையிட்டதில் 32 சீன நாட்டவர்கள் பயன்படுத்திய 23 கணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடுதியொன்றில் சீன நாட்டவர்கள் குழுவொன்று இணையத்தளம் ஊடாக சட்டவிரோத வியாபாரம் அல்லது நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த தகவல் கிடைத்துள்ளது.

மேலதிக விசாரணை
அதற்கு அமைய, பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நல்ஓருவ பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்று 2026.11.06 மற்றும் 07 ஆம் திகதிகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடுதியில் 32 சீன நாட்டவர்கள் தங்கியிருந்துள்ளதுடன், அவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அவர்கள் பயன்படுத்திய 23 கணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.