மருத்துவமனை உத்தியோகத்தர் மீது தாக்குதல்; சந்தேக நபர் தப்பியோட்டம்!
ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையைப் பார்ப்பதற்காக வந்த நபரொருவர், மருத்துவமனை பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர் மற்றும் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சிகிச்சை பிரிவில் மருத்துவருடன் ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து, அவரை வெளியேறுமாறு பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் கூறியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தரின் தலையில் குறித்த நபர் தாக்கியுள்ளதுடன், அதைத் தடுக்க வந்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரையும் தள்ளிவீழ்த்திவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கி தப்பியோடிய புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை கைதுசெய்ய ஹொரணை தலைமையகக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.