நடுவீதியில் அரங்கேறிய பயங்கரம்; மக்கள் அதிர்ச்சி
மாத்தறை - அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையத்துக்கு முன்னால் மீன் வியாபாரிகள் சிலர் ஒருவரை ஒருவர் சரமாரியாக வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக அக்குரெஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முன்விரோதம் காரணமாக தாக்குதல்
அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையத்துக்கு முன்னால் சென்ற மீன் வியாபாரிகள் சிலர் 33 வயதுடைய மகனை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இதனை அவதானித்த தந்தை மீன் வெட்டும் கத்தியால் சந்தேக நபர்களை தாக்கியுள்ளார். பின்னர் சந்தேக நபர்களும் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிகொண்டுள்ளனர்.
தாக்குதலில் மகனும் தந்தையும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகராறை தடுக்க முயன்ற நபரொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள 57 வயதுடைய தந்தையும் 33 வயதுடைய மகனும் உட்பட மூவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் சம்பவம் குறித்த விற்பனை நிலையத்துக்கு அருகில் உள்ள சிசிரிவி கமரால் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு உதவி செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் அக்குரெஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.