தென்னிலங்கையில் பயங்கரம்; மூதாட்டி படுகொலை; அதிர்ச்சியில் மகன்
வலஸ்முல்ல பொலிஸ் பிரிவின் உடகஹவத்த பகுதியில், 85 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் குற்றச் சம்பவம் நேற்று (28) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண், உடகஹவத்த பகுதியைச் சேர்ந்தவர் மற்றும் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் தீவிர விசாரணை
நேற்று (28) இரவு, அவரது மகன் உணவு வழங்கிவிட்டு வெளியேறிய பின்னர், வீட்டிற்குள் நுழைந்த ஒருவர் இந்தக் கொலையை மேற்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பியோடியுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய வலஸ்முல்ல பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        