அச்சுவேலியில் இடம்பெற்ற கோர விபத்து; ஆணொருவருக்கு நேர்ந்த சோகம்!
இன்றையதினம், அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லை வீதியில் கப் ரக வாகனம் மோதி ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் புல் செருக்கிக் கொண்டு இருந்தவேளை வீதியால் வந்த கப் ரக வாகனம் மோதி இவ் விபத்து சம்பவத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவரது பெயர் சீனியர் சந்திரகாந்தன் என தெரியவந்துள்ளது. இதன் போது இன்னொருவர் மீதும் குறித்த வாகனம் மோதி அவர் படுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்தினை ஏற்படுத்தியவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதனையடுத்து அச்சுவேலி பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த சாரதியே இவ்வாறு விபத்தினை ஏற்படுத்திவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மேலும் இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.