இனிமையான பேச்சால் மற்றவர்களை கவரும் மூன்று ராசிகள்: எந்தெந்த ராசி தெரியுமா?
கிரகங்களின் தாக்கத்தால் ஒவ்வொரு ராசிக்காரர்களின் இயல்புகளும் வேறுபடும். சில ராசிக்காரர்களுக்கு மக்களுடன் இணக்கமாக வாழும் குணம் இருக்கும். சில ராசிக்காரர்கள் தங்கள் கவர்ச்சித் திறன்களால் எதிரில் இருப்பவர்களைக் கவர்ந்து விடுகிறார்கள்.
தனுசு : இந்த ராசிக்காரர்கள் பார்ப்பதற்கு அப்பாவியாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் மிகவும் மூளை கூர்மையானவர்கள். தனுஷ் ராசிக்காரர்கள் இனிமையான பேச்சால் மற்றவர்களை கவர்வார்கள். இந்த ராசிக்காரர்கள் கவர்ச்சிகரமானவர்கள். இது தவிர இந்த ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களின் ஆளுமை பண்பு மிகவும் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு புதிய வேலையையும் செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள். வாழ்க்கை துணை, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரின் கருத்துக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அதேசமயம் மற்றவர்களால் ஏமாற்றப்படும் போது மனம் உடைந்து போவார்கள். எனவே அவர்கள் துரோகம் செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து விலகி இருக்கிறார்கள். வசீகரிக்கும் திறன் காரணமாக, விருச்சிக ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள்.
மிதுனம் : இந்த ராசிக்காரர்கள் மிகவும் சிந்திக்கக் கூடிய ராசிகளாக இருக்கிறார்கள். மிதுன ராசிக்காரர்கள் பெரும் கூட்டத்திலும் கூட அனைவரையும் கவரும் வகையில் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் புதிதாக ஏதாவது செய்ய விரும்புகிறார்கள். மற்றவர்களுடன் சிறந்த உறவு இருக்கும். இது தவிர, இந்த ராசிக்காரர்கள் எப்போதும் தங்களைப் பற்றியே சிந்திக்கும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.