ஹொரண முதியோர் இல்ல தீ விபத்து; பலி எண்ணிக்கை மேலும் உயர்வு; பணிப்பாளர் கைது
ஹொரண, அங்குருவாதொட்ட பகுதியில் நேற்று மாலை (03) முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
ஹொரண - படகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீ விபத்தின் போது மீட்கப்பட்ட முதியவர்கள் தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இல்லத்தின் பணிப்பாளர் கைது
மீட்கப்பட்ட 51 பேர் தற்போது படகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டமைக்கான முதன்மைக் காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் மீலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
12 பேர் உயிரிழப்பதற்குக் காரணமான ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்துச் சம்பவம் தொடர்பாக, அந்த இல்லத்தின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்றைய தினம் ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.