தினமும் ஒரு ஸ்பூன் தேன் ; உடலில் நிகழும் அற்புத மாற்றம்!
தேன் இயற்கை நமக்கு தந்த ஒரு பரிசு. ஏனெனில் தேனில் மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் மனிதன் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
தினசரி உணவில் சர்க்கரைக்கு மாற்றாக தேனை பயன்படுத்தலாம். முக்கியமாக நாட்டு மருத்துவத்தில் மருந்துகளை உட்கொள்ள தேன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எடை மடமடன்னு குறைய உதவும் தேன்
தேனில் நன்மை விளைவிக்கும் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ன.
ஆய்வு ஒன்றில், ஃபுருக்டோஸ் நிறைந்த தேனை உட்கொண்ட விளையாட்டு வீரர்களின் உடலில் உள்ள கொழுப்புக்கள் எரிக்கப்படுவதோடு, உடலின் ஸ்டாமினா அதிகரிப்பது தெரிய வந்தது.
தேனானது கல்லீரலில் குளுக்கோஸை உற்பத்தி செய்ய ஒரு எரிபொருளாக செயல்படுகிறது.
இந்த குளுக்கோஸ் மூளையில் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, கொழுப்புக்களை எரிக்கும் ஹார்மோன்களை வெளியிடத் தூண்டுகிறது.
தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் தொற்றுக்களில் இருந்து உடலைப் பாதுகாக்கின்றன.
தேனை சுடுநீரில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும் என்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால் தேனை இன்னும் பல வழிகளில் உட்கொள்வதன் மூலம் உடல் எடை இன்னும் சிறப்பாக குறைவதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.
எந்தெந்த வழிகளில் தினசரி தேனை பயன்படுத்தலாம்?
1. தேன் மற்றும் எலுமிச்சை
தேன் - 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் , தண்ணீர் - 300 மிலி , ப்ளாக் சால்ட்
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் சூடானதும், அதை இறக்க வேண்டும் (நீரை கொதிக்க வைக்க வேண்டாம்.). பின் அந்நீரை சற்று குளிர வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு மற்றும் ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இப்படி தினமும் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
2. தேன் மற்றும் பால்
பால் - 1 டம்ளர் , தேன் - 1 டேபிள் ஸ்பூன்
முதலில் பாலை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். பால் வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, அதில் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
இந்த பாலை குடித்து வருவதன் மூலம், பாலில் உள்ள புரோட்டீன் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும், தொப்பையைக் குறைக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
3. சுடுநீரில் தேன்
எளிய முறையில் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், சுடுநீரில் தேன் கலந்து குடிக்கலாம். அதற்கு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
இப்படி ஒருவர் தினமும் குடித்து வருவதன் மூலம், உடல் எடை கணிசமாக குறைவதைக் காணலாம்.
4. க்ரீன் டீயில் தேன்
நீங்கள் டீ பிரியர் என்றால், உடல் எடையைக் குறைக்க க்ரீன் டீ பெரிதும் உதவி புரியும். அதுவும் நீங்கள் தயாரிக்கும் க்ரீன் டீயில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும்.
பல ஆய்வுகளில் க்ரீன் டீயை தொடர்ந்து குடித்து வருவது உடல் எடையைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் தேன் சேர்த்து குடிக்கும் போது, அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையை மேலும் குறைக்க உதவி புரியும்.
5. பட்டை மற்றும் தேன்
தண்ணீர் - 1/2 கப், பட்டை - 1 துண்டு, தேன் - 1 டேபிள் ஸ்பூன்
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். நீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் பட்டையைப் போட்டு இறக்கி, 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
10 நிமிடம் கழித்து, நீரை வடிகட்டி, அத்துடன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த டீயை தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், உடல் எடை வேகமாக குறையும்.
குறிப்பு
உடல் எடையைக் குறைக்கும் வழிகளை மேற்கொள்ளும் போது, ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதுடன் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டும் வந்தால், விரைவில் உடல் எடையில் மாற்றத்தைக் காணலாமாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.