சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும் வீட்டு வைத்தியம்
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய சில ஆரோக்கியமான பானங்கள் உள்ளன.
அவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.
கட்டுப்படுத்தும் பானம்
நீரிழிவு நோயாளிகளுக்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் ஏராளமாக உள்ளன. இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும் .
பாகற்காய் ஜூஸ் நீரிழிவு நோய்க்கான ஒரு மருந்தாகக் கருதப்படுகிறது. பாகற்காய் ஜூஸ் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
கிரீன் டீயை தினமும் உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்கிறது.
இளநீர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, ஆனால் அதன் நீர் நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. ஏனெனில் வைட்டமின் பி, பொட்டாசியம், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் என்சைம் சத்துக்கள் இதில் காணப்படுகின்றன.