42 வருடத்தில்... அபிவிருத்தி லொத்தர் சபை படைத்த வரலாறு!
இலங்கையில் அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 ஆண்டு வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022 - 2023 ஆம் ஆண்டில் 32% இலாபத்தை ஈட்டி புதிய சாதனையை படைத்துள்ளது.
இது 2022 ஆம் ஆண்டு பெற்ற இலாபத்தின் இருமடங்காகும்.
இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி லொத்தர் சபை 3,622,506,725 ரூபாய் 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது.
இதேவேளை, அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாயினை வழங்கியுள்ளது.