தமிழர் பகுதியொன்றில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த கோர விபத்து
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் லொறி ஒன்று சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (24) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறி சாரதி கைது
காத்தான்குடி நோக்கி பயணித்த லொறி ஒன்று, அதன் முன்னால் சென்ற சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஆரையம்பதி 02 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.