கொழும்பில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக ஹிருணிகா குற்றச்சாட்டு
கொழும்பில் கடந்த புதன் கிழமை நடந்த எதிர்ப்பு போராட்டத்தின் போது தான் உட்பட சில பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிய பொலிஸார்
போராட்டத்தில் தான் கலந்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் தனக்கு தன்னுடன் வந்திருந்த இரண்டு பெண்களையும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக ஹிருணிகா முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
சாதாரணமாக எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஆண் அல்லது பெண் தள்ளிவிடப்படும் சம்பவம் எப்போதாவது நடப்பதுண்டு.தெரியாமல் தொடுல்களுக்கு உள்ளாவது சாதாரணமானது.
காணொளி ஆதாரங்கள் இருக்கின்றன
எனினும் பொலிஸார் குறித்த போராட்டத்தின் போது அப்படி நடந்துக்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அந்த பொலிஸ் அதிகாரிகளின் இலக்கங்கள் மாத்திரமல்லாது காணொளி ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் ஹிருணிகா பிரேமச்சந்திர மேலும் தெரிவித்துள்ளார்.