தேயிலை பைக்கற்றுகளில் அடைத்து ஹெரோயின் விற்பனை!
பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளை தேயிலை பைக்கற்றுகளில் நீண்ட காலமாக கடத்தி வந்த சந்தேக நபரை அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை, கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தடுப்புக் காவலில் வைத்து விசாரணை
குறித்த வழக்கானது நேற்று (16) கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை எதிர்வரும் மார்ச் மாதம் (19) ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதன் போது 48 வயது மதிக்கத்தக்க கைதான குறித்த சந்தேக நபர் வசம் இருந்து தேயிலை பையில் மறைத்து வைக்கப்பட்ட ஹெரோயின் பொதிகள் மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டார்.