மாவீரர் நினைவேந்தல்; சாவகச்சேரியிலும் 21 பேருக்குத் தடை
மாவீரர் நினைவேந்தலை முன்னெடுக்க யாழ் சாவகச்சேரியில் 21 பேருக்குத் தடை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவீரர் நினைவேந்தலை முன்னெடுக்க தடைவிதிக்கக் கோரி சாவகச்சேரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய சாவகச்சேரி நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த தடை உத்தரவு நேற்று வழங்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 28 திகதி வரை நினைவேந்தல் நிகழ்வுகள் எதனையும் முன்னெடுக்கமுடியாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரன், உட்பட்ட அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உட்பட்ட 21 பேருக்கே இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.