பரம்பரையாக இதய நோய் பாதிப்பா! உங்களுக்கான சில வழிமுறைகள்
பப்பாளியில் லேடெக்ஸ் மற்றும் பாப்பைன் என்ற கலவை உள்ளது. கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதத்தை உடைக்க வேலை செய்கிறது.
ஆனால் அதிகப்படியாக சாப்பிடுவது தொண்டைக்கு சேதம் விளைவிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது உணவு முழாயை சுருக்க கூடும் என ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.
மாரடைப்பு
மாரடைப்பு பாதிப்பில் பரம்பரைத் தன்மைக்கும் சிறு பங்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் நம் மரபியலில் உள்ள அனைத்தும் கட்டாயம் நடந்தே தீர வேண்டும் என்றும் அவசியமில்லை.
மரபியல் தொடர்பான கணிப்புகள் அதிகரிக்க நம் வாழ்வியல் முறை மிக முக்கிய காரணம்.அதே வாழ்வியல் முறை மாற்றங்களால் அந்த பாதிப்புகளைக் குறைக்கவும் முடியும்.
நோய்கள்
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புகை மற்றும் குடிப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள் செய்யாதது, தூக்கம் குறைவாக இருப்பது, ஸ்ட்ரெஸ் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
நீரிழிவையும் ரத்த அழுத்தத்தையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
இதயநோய் பாதிப்பு
புகை, மதுப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சிக்கென தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக்கொள்வது போன்றவற்றில் கவனமாக இருந்தாலே களின் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
செய்ய வேண்டியவை
வருடம் ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
ஹெச்எஸ் சிஆர்பி (High-Sensitivity CRP (hsCRP) மற்றும் கால்சியம் ஸ்கோர் (Calcium Score Screening) போன்ற டெஸ்ட்டுகளை செய்வதன் மூலம் ரிஸ்க் அளவை கண்டறியலாம்.
குடும்பப் பின்னணியில் இதயநோய் பாதிப்பு இருந்தாலோ, ரிஸ்க் பிரிவில் இருந்தாலோ, மருத்துவருடன் கலந்து பேசி, செய்யப்பட வேண்டிய பரிசோதனைகள் இவை.
எனவே பரம்பரையாக பாதிக்கும் ஆபத்து ஓரளவு இருக்கும் நிலையிலும், அதைத் தடுக்கவும் நம்மிடம் வழிகள் உண்டு என்பதை மறக்க வேண்டாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.