கோவாக்கா செடியுடன் மூலிகை மருந்தை
ருஹுனு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, கோவாக்கா செடியுடன் மூலிகை மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
மருத்துவ பீடத்தின் ஆராய்ச்சி குழுவின் தலைவர் பேராசிரியர் அனோஜா அத்தநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில் "கோவாக்கா ஆலையில் (கொசினியா கிராண்டிஸ்) இரசாயன கலவைகள் குறித்து நீண்ட காலமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய மருந்தை கண்டுபிடித்தனர்.
ரூ.4.7 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சித் திட்டத்திற்கு தேசிய அறிவியல் கழகம் நிதியளித்துள்ளது" என அவர் கூறியுள்ளார்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்காக கொவாக்கா தாவரத்தின் இரசாயன கலவைகளைப் பயன்படுத்தி அவர்கள் ஒரு காப்ஸ்யூல் தயாரித்ததாக பேராசிரியர் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த மருந்து 158 நோயாளிகளுக்கு நீரிழிவு நோய் சிகிச்சையில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டதாக குழுவின் உறுப்பினர் பேராசிரியர் திலக் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் பேராசிரியர் கமனி ஜயதிலக, மற்றும் கலாநிதி பியுமி வாசனா ஆகியோர் ஆய்வுக் குழுவில் இருந்தமை குறிப்பிட தக்கது.